Last updated: 19 Jun, 2020

ஆரோவில் சாசனம்  The Auroville Charter

1.    ஆரோவில் குறிப்பிட்ட எவருக்கும் சொந்தமானது அல்ல. ஆரோவில் மனித இனம் முழுவதற்கும் சொந்தமானது ஆகும். ஆனால், ஆரோவில்லில் வசிக்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினால், அவர் தெய்வீக உணர்விற்கு விருப்பத்துடன் தொண்டு செய்பவராக இருக்கவேண்டும்.

 

2.    ஆரோவில் முடிவுறாத கல்வி, இடையறாத முன்னேற்றம், மூப்புறாத இளமை ஆகியவற்றின் இருப்பிடமாக விளங்கும்.

 

3.    ஆரோவில் சென்ற காலத்திற்கும், வருங்காலத்திற்கும் இடையே ஒரு பாலமாக இருக்க விழைகிறது. புற உலக, அக உலகக் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தியபடி ஆரோவில்லானது துணிவுடன் எதிர்கால நன்முடிவுகளை நோக்கித் துடிப்புடன் முகிழ்த்து எழும்.

 

4.    ஆரோவில் மனிதகுல ஒருமைபாட்டிற்கு ஓர் உருவம் கொடுப்பதற்கான உலகியல் மற்றும் ஆன்மிக ஆராய்ச்சிகளுக்குரிய நிலையமாக விளங்கும்.

 

1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதியன்று ஆரோவில் நகரத்தை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

 

ஆரோவில் சாசனம் ஸ்ரீ அன்னையின் குரலில் ஒலித்து முடித்த பிறகு, ஒவ்வொரு நாட்டின் பெயரும் வாசிக்கப்பட்டது. அப்போது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அந்தந்த நாட்டின் பிடி மண்ணை தாமரை மொட்டுத் தாழியினுள் இட்டனர். மனிதகுல ஒருமைப்பாட்டைக் குறிக்கும் அடையாளச் சின்னமாக எல்லா நாடுகளின் மண்ணும், எல்லா இந்திய மாநிலங்களின் மண்ணும் தாழியுள் ஒன்று சேர்ந்தன. புதியதோர் உலகம் படைக்கும் பணி துவங்கியது.

                                          ஸ்ரீ அன்னை (21.02.1968)