Last updated: 29 Aug, 2024

ஆரோவில் சாசனம்: வேறொரு வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கான புதிய அகக்காட்சியின் சக்தி மற்றும் வாக்குறுதி

1968 பிப்ரவரி 28ஆம் நாள் ஆரோவில் பிறந்தது. அதன் நிறுவனர், ஸ்ரீ அன்னை, ஆரோவில்லுக்கான அவரது அகக்காட்சியை பிரதிபலிக்கும் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்ட ஆரோவில் சாசனத்தை உருவாக்கினார். ஆரோவில் தொடங்கியபோது, அகில இந்திய வானொலி, இச்சாசனத்தை 16 மொழிகளில் நேரடியாக ஒலிபரப்பியது. ஆரோவில்வாசிகள் தங்கள் அன்றாட வாழ்வில், கொள்கை-வளர்ச்சி மற்றும் பெரிய மற்றும் சிறிய முடிவுகளில், ஆரோவில் சாசனத்தின் இந்த முக்கிய கருத்துகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த சாசனம் இவ்வாறு எங்கும் நிறைந்து ஒரு குறிப்பிடுகிற பொருளாகத் திகழ்கிறது. இது ஆரோவில்லில் வாழ மற்றும் வேலைசெய்ய விரும்பும் மக்களை அமைதியாக வழிநடத்துகிறது.

ஆரோவில் சாசனம்

1. ஆரோவில் குறிப்பிட்ட எவருக்கும் சொந்தமானது அல்ல. ஆரோவில் மனித இனம் முழுவதற்கும் சொந்தமானது ஆகும். ஆனால், ஆரோவில்லில் வசிக்க வேண்டும்என்று ஒருவர் விரும்பினால், அவர் தெய்வீக உணர்விற்கு விருப்பத்துடன் தொண்டு செய்பவராக இருக்கவேண்டும்.

2. ஆரோவில் முடிவுறாத கல்வி, இடையறாத முன்னேற்றம், மூப்புறாத இளமை ஆகியவற்றின் இருப்பிடமாக விளங்கும்.

3. ஆரோவில் சென்ற காலத்திற்கும், வருங்காலத்திற்கும் இடையே ஒரு பாலமாக இருக்க விழைகிறது. புற உலக, அக உலகக் கண்டுபிடிப்புகள் அனைத்தையும்பயன்படுத்தியபடி ஆரோவில்லானது துணிவுடன் எதிர்கால நன்முடிவுகளை நோக்கித் துடிப்புடன் முகிழ்த்து எழும்.

4. ஆரோவில் மனிதகுல ஒருமைபாட்டிற்கு ஓர் உருவம் கொடுப்பதற்கான உலகியல் மற்றும் ஆன்மிக ஆராய்ச்சிகளுக்குரிய நிலையமாக விளங்கும்.

1968ஆம் ஆண்டில் ஆரோவில் தொடக்கவிழாவின் போது, 124 நாடுகள் மற்றும் 23 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், அந்தந்த நாட்டின் கைப்பிடி மண்ணை தாமரை மொட்டுத் தாழியினுள் இட்டனர். இது ஆம்பித்தியேட்டரின் மையத்தில் பளிங்கு உறை அமைப்பால் ஆனது, (புகைப்படத்தைப் பார்க்கவும்). ஆரோவில் சாசனம் – ஸ்ரீ அன்னையால் பிரெஞ்சு மொழியில் அவர்தம் கைப்பட எழுதப்பட்டது - இம்மண்ணுடன் சேர்த்து தாழியுனுள் சீல் வைக்கப்பட்டு, ஒரு சக்திவாய்ந்த செய்தி மற்றும் வாக்குறுதியாகத் திகழ்கிறது.