Last updated:
ஸ்ரீ அரவிந்தரின் சின்னம்
கீழ் முக முக்கோணம் – சத் – சித் ஆனந்தா. மேல் முக முக்கோணம் – ஒளி, வாழ்வு, அன்பு இவற்றின் மூலமாக இறைவனோடு இணைய விரும்பும் ஜடத்தின் ஆர்வத்தைக் குறிக்கிறது. முக்கோணங்கள் இணையும் இடம் – நடுவிலுள்ள சதுரம் – பூரண வெளிப்பாட்டைக் குறிக்கிறது. சதுரத்தின் நடுவிலுள்ள தாமரை பரம்பொருளின் அவதாரத்தைக் குறிக்கிறது. சதுரத்தினுள் இருக்கும் நீர் ‘ஏகம்’ ‘அநேகம்’ ஆனதை அதாவது சிருஷ்டியைக் குறிக்கிறது.
- ஸ்ரீ அன்னை