Last updated: 5 May, 2022

மாத்ரிமந்திர் – நகரின் ஆன்மா 

ஆரோவில்லின் மையத்தில், 'நகரத்தின் ஆன்மாவான', மாத்ரிமந்திர், 'அமைதி' என்றழைக்கப்படும் ஒரு பெரிய திறந்த பகுதியில் அமைந்துள்ளது, அங்கிருந்து வருங்கால நகரம் வெளிப்புறமாக பரந்து விரிந்துள்ளது. தோட்டங்களில் வேலை தொடர்ந்தாலும், அப்பகுதி அமைதியாகவும் சக்தியூட்டப்பட்டதாகவும் உள்ளது, அந்த பகுதி அழகாகவும் இருக்கிறது.

மாத்ரிமந்திர் ஆரோவில்லின் ஆன்மாவாக விளங்கும். அவ்வான்மாக அங்கு விரைவில் கோயில் கொள்வது எல்லாருக்கும் நல்லது. குறிப்பாக ஆரோவில்வாசிகளுக்கு. 

ஸ்ரீ அன்னை

 

ஒருவர் தமது உள்ளுணர்வைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதற்கான ஒரு இடம்.

இது ஒரு பெரும்சக்தி, ஆரோவில்லின் மத்தியப் பகுதியின் பெரும்சக்தி, ஆரோவில்லின் ஒருங்கிணைந்த பெரும்சக்தி போன்றது.

ஸ்ரீ அன்னை

 

மாத்ரிமந்திர்

மாத்ரிமந்திர் ஒரு பெரிய தங்கக் கோளமாகப் பார்க்கப்படுகிறது, இது பூமியில் இருந்து வெளிவருவது போல தோற்றமளிக்கின்றது, இது ஒரு புதிய உள்ளுணர்வின்/ஜீவியத்தின் பிறப்பைக் குறிக்கிறது. கடந்த 45 ஆண்டுகளாக, மாத்ரிமந்திரின் கட்டிடப்பணி மெதுவாகவும் சீராகவும் நடைபெற்று நிறைவு பெற்றது என்பது பலரும் அறிந்ததே. 

 

அழகிய பசுமையான மாத்ரிமந்திர் தோட்டங்களுக்கு ("இணக்கம்", "பேரானந்தம்", ”பரிபூரணம்" என தனித்தனியாக பெயரிடப்பட்டு, 12 பூங்காக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் பலவிதமான பூக்கள், புதர்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றைக் கொண்டவை, இந்த முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த அம்சத்தால் ஒருவருடைய கவனம் பெரிதும் ஈர்க்கப்படுகிறது. இந்நகரத்தின் மையத்தில் "இது மனிதனின் பரிபூரணத்திற்கான ஆர்வத்திற்கு தெய்வீகத்தினுடைய பதிலின் சின்னமாகத் திகழ்கிறது" என்றும்,  ஆரோவில்லின் வளர்ச்சிக்காக "மையத்தில் ஒருங்கிணைந்த சக்தி" என்றும் ஸ்ரீ அன்னையால் காணப்பட்டது.

 

பரிணாமக் கொள்கை

'மாத்ரிமந்திர்' என்ற பெயருக்கு 'அன்னையின் ஆலயம்' என்பது பொருளாகும். ஸ்ரீ அரவிந்தரின் போதனையின்படி, 'அன்னை' என்ற கருத்துரு, வாழ்க்கையின் மாபெரும் பரிணாமம், உள்ளுணர்வு (ஜீவியம்), அறிவார்ந்த கொள்கை, பிரபஞ்ச அன்னை ஆகியவற்றைக் குறிக்கிறது - அதன் பரிணாம சாகசத்தின் அடுத்த கட்டமான, அதிமன ஜீவியத்தை அடைவதற்கு, அதன் தற்போதைய வரம்புகளைத் தாண்டி மனிதஇனத்திற்கு உதவ இது முயலுகிறது.

 

"அன்னை ஆனவள் பரம ஜீவியம் மற்றும் சக்தியானவள், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் படைக்கிறாள். ஆனால் அவளுடைய சில வழிகளை அவளது உருவங்கள் மூலம் பார்க்கவும் உணரவும் முடியும், ஏனெனில் இறைவியின் மிகவும் வரையறுக்கப்பட்ட மற்றும் வரம்புக்குட்பட்ட மனோபாவத்தையும் செயலையும் அவளது உயிரினங்களில் வடிவம்கொண்டு இணக்கமாக வெளிப்படுகிறாள்.”  ஸ்ரீ அரவிந்தர்

 

பிரபஞ்ச அன்னையைப் பற்றி மேலும் அறிய ஸ்ரீ அரவிந்தரின் ஸ்ரீ அன்னை என்ற சிறிய புத்தகத்தை படிக்கவும், அதில் அவர் தெய்வீக அன்னையின் இயல்பு, பண்பு ஆகியவற்றைப் பற்றி விவரிக்கின்றார். 

உள்அறை

மாத்ரிமந்திர் மேல் அரைக்கோளத்தில் உள்ள விசாலமான உள்அறை முற்றிலும் வெண்மை நிறத்தில் காட்சியளிக்கிறதுஅதன் பளிங்கு சுவர்கள் மற்றும் தூண்கள் யாவும் வெள்ளை நிறத்தால் ஆனவை, தரைவிரிப்பும் வெள்ளை நிறத்தால் ஆனது. உள்அறையின் மையத்தில் ஒரு தூய படிகக் கண்ணாடி கோளம் அமர்ந்திருக்கிறதுஇதுஉள்அறையின் உச்சியில் ஒரு திறப்பு வழியாக அதன் மீது விழும் மின்னணு வழிகாட்டப்பட்ட சூரிய ஒளியால் பரவியுள்ளதுஇந்த ஒளிரும் கோளம் உள்அறையில்இயற்கையான வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது.

"மிக முக்கியமான விஷயம் இதுதான்மையத்தில் சூரியன் செயலாற்றுகிறதுஏனென்றால் அது அடையாளம் ஆகும், அது எதிர்கால வெளிப்பாடுகளின் அடையாளம் ஆகும்.” 

உள்அறையில் படங்கள்ஒழுங்கமைக்கப்பட்ட தியானங்கள்பூக்கள்தூபங்கள்மதம் அல்லது மத வடிவங்கள் எதுவும் கிடையாது.

ஒருவர் தம் உள்ளுணர்வைக் கண்டறிய....

"மனத்தை ஒருமுகப்படுத்த கற்றுக்கொள்ள விரும்புவோருக்காக" மாத்ரிமந்திர் உள்ளது. "நிலையான தியானங்கள் இல்லை, அது எதுவுமில்லை, ஆனால் அவர்கள் அங்கே அமைதியாக இருக்கவேண்டும், அமைதியாக மனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். அது ஒருவர் தம் உள்ளுணர்வைக் கணடறிய முயற்சி செய்யும் ஓர் இடம்."

மதம் இல்லை

"இது ஒரு மதமாக மாறக்கூடாது", ஸ்ரீ அன்னை கூறினார். "மதங்களின் தோல்வி என்னவென்றால்... அவை பிளவுபட்டதால், மற்ற மதங்களை விலக்குவதற்கு மக்கள் மதவாதிகளாக இருக்கவேண்டும் என்று அவை விரும்பின, மேலும் அறிவின் ஒவ்வொரு பகுதியும் பிரத்தியேகமாக இருந்ததால் தோல்வியடைந்தன.

புதிய உள்ளுணர்வு என்ன விரும்புகிறது (இதைத்தான் அது வலியுறுத்துகிறது): மேலும் பிளவுகள் இல்லை.

ஆன்மீக தீவிரம்பொருள் தீவிரம்சந்திப்பு இடத்தைக் கண்டறிய, அது ஒரு உண்மையான சக்தியாக மாறும் புள்ளியைக் கண்டறிய, அவற்றைப் புரிந்துகொள்ள முடியும்."