Logo Logo small
Saving...

  • Vision
    • The Auroville Charter
    • A Dream
    • To be a True Aurovilian
    • The Galaxy Concept of the City
    • Matrimandir - Soul of the City
    • Founder: The Mother
    • Visionary: Sri Aurobindo
    • Words of Wisdom
    • Integral Yoga
  • Activities
    • Matrimandir
    • Planning & Architecture
    • Green Practices
    • Education & Research
    • Art & Culture
    • Health & Wellness
    • Social Enterprises
    • Media & Communication
    • Rural Development
    • City Services
  • Community
    • Auroville in Brief
    • Testimonials & Support
    • Organisation & Governance
    • Society
    • Economy
    • History
    • People
  • What You Can Do
    • Visit & Stay
    • Volunteer & Intern
    • Study in Auroville
    • Join Auroville
    • Workshops & Therapies
    • Donate
    • Shop
    • Contact Auroville
    • Contact Nearby Centre
  • Flags
    • العربية
    • Български
    • 中文
    • Dutch
    • Français
    • Deutsch
    • हिन्दी
    • Italiano
    • 日本語
    • 한국어
    • Polskie
    • Português
    • Русский
    • Español
    • Svenska
    • தமிழ்
HomeWhat you can doVisit & Stay
Last updated: Feb 4, 2017

மாத்ரிமந்திரைப் பார்வையிடுதல் (Visiting the Matrimandir)   

1.வியூவிங் பாயிண்டிலிருந்து மாத்ரிமந்திரை பார்க்கும்போது
1.வியூவிங் பாயிண்டிலிருந்து மாத்ரிமந்திரை பார்க்கும்போது

மாத்ரிமந்திர் ஒரு “சுற்றுலாத்தளம்” அல்ல என்பதை பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் நினைவில் கொள்ளவேண்டும்; மாத்ரிமந்திர், ஒருவர் அமைதியாக மனத்தை ஒருமுகப்படுத்தும் இடம் ஆகும். நல்ல மனநிலை மற்றும் உடல்நிலை உள்ளவர்கள் பார்வையிடுவதற்குரிய இடமாகும்.

 

மாத்ரிமந்திரை கட்டணம் ஏதுமின்றி இலவசமாகப் பார்வையிடலாம். மாத்ரிமந்திர் அனுமதிச்சீட்டு பெற முகவர், வழிகாட்டுநர் அல்லது சுற்றுலா நடத்துநர் மூலம் முன்பதிவுகள் செய்யமுடியாது.

 

மாத்ரிமந்திர் பற்றிய பொதுத்தகவல்களை பார்வையாளர்கள் மையத்தின் (விசிட்டர் சென்டரில்)  தகவல் மையத்தில் காலை 9 – 1 மணிவரை மற்றும் பிற்பகல் 1.30 – 5 மணிவரை பெறலாம்.  அறிமுகப் படக்காட்சி  பல்வேறு மொழிகளில் காண்பிக்கப்படுகிறது.


மாத்ரிமந்திரை வெளியில் இருந்து பார்வையிடுதல்

மாத்ரிமந்திர் வியூவிங் பாய்ண்ட், ஒற்றுமை பூங்காவின் தெற்கே அமைந்துள்ளது, இங்கே மாத்ரிமந்திர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் அழகைக் கண்டுரசிக்க ஒரு தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

மாத்ரிமந்திர் பற்றிய குறும்படத்தை பார்த்த பின்னர், மாத்ரிமந்திர் வியூவிங் பாயிண்ட் செல்வதற்கான அனுமதிச்சீட்டு ஆரோவில் பார்வையாளர்கள் மையத்தில் (விசிட்டர் சென்டர்) இலவசமாக வழங்கப்படும்.
பார்வையாளர்கள் மையத்தில் (விசிட்டர் சென்டர்) அனுமதிச்சீட்டு வழங்கப்படும் நேரம்:

திங்கள் – சனி : காலை 9  மணி -  பிற்பகல்  4.00 மணி வரை.
ஞாயிறு: காலை 9.00 – 1 மணிவரை மட்டுமே,  பிற்பகல் மூடப்படும்.  


மாத்ரிமந்திர் வியூவிங் பாயிண்ட் செல்வதற்கான வழி:

பார்வையாளர்கள் மையத்திலிருந்து வியூவிங் பாயிண்ட் செல்ல 10 -12 நிமிடங்கள் மரங்களின் நிழலில் நடந்து செல்லவேண்டும். நடக்க சிரமப்படுபவர்களுக்கு இலவச மின்சார வேன் வசதி உள்ளது. நடந்து செல்பவர்கள் போக 1 கி.மீ. தூரமும், திரும்பி வர 1 கி.மீ. தூரமும் நடக்கவேண்டும். வியூவிங் பாயிண்டிலிருந்து பார்வையாளர்கள் மையத்திற்கு (விசிட்டர் சென்டர்) திரும்பி வரும்போது விருப்பமுள்ளவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் வசதி உள்ளது.

 

உங்களுக்கு இன்னும் சிறிது நேரம் இருந்தால், ஆரோவில்லின் மற்ற அம்சங்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால், விசிட்டர் சென்டருக்குத் திரும்பி வரும் வழியில் சாவித்ரி பவன், ஒருமை அரங்கம் (யூனிட்டி பெவிலியன்), திபெத்தியன் அரங்கம் (பெவிலியன்), இனுக்சுக் போன்ற சுவாரஸ்யமான இடங்களுக்குச் சென்று பார்க்கலாம். (இதற்கு 2 மணி நேரம் ஆகும்). 

 

மாத்ரிமந்திர் உள்அறைக்கு முதல் தடவையாகச் செல்லுதல்

·          மாத்ரிமந்திரில் மனத்தை ஒருமுகப்படுத்தச் செல்வதற்கு, குறைந்தபட்சம் ஒருநாளுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யவேண்டும்.

·          அனைத்து முன்பதிவுகளும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவே பதிவு செய்யப்படுகிறது. ஆகவே, ஒரு நபர் நேரடியாக வந்தால் மட்டுமே பதிவு செய்யப்படும் (முதல் தடவையாக மனத்தை ஒருமுகப்படுத்த வரும் நபருக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய இயலாது).

·          குழுக்களுக்கு முன்பதிவு செய்யும் வசதி கிடையாது.

·         முன்பதிவுகள் எப்போதும் காலியாக உள்ள முதல் நாளில் அல்லது தொடர்ந்து வரும் நாட்களில், மற்றும் ஒரு வாரத்திற்கு முன்னதாக செய்யப்படும். 

·         முதல் தடவையாக மாத்ரிமந்திரில் மனத்தை ஒருமுகப்படுத்த செல்வதற்கு முன்பதிவு செய்துள்ள பார்வையாளர்களுக்கு மாத்ரிமந்திர் பற்றிய ஒரு அறிமுகம் அளிக்கப்படும். மாத்ரிமந்திர் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கப்படும். அதைத்தொடர்ந்து உள்அறையில் 10–15 நிமிடங்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தலாம்.

”மாத்ரிமந்திர்” பற்றிய 10 நிமிட அறிமுக வீடியோவை ஒருவர் பார்த்த பின்பு,  செவ்வாய் தவிர மற்ற நாட்களில் காலை 10 -11 மணிக்கு அல்லது பிற்பகல் 2 – 3 மணிக்கு,  அவரே நேரடியாக பார்வையாளர் மையத்திற்கு வந்து (விசிட்டர் சென்டர்) முன்பதிவு செய்யவேண்டும்.


மாத்ரிமந்திரில் முன்னதாகவே மனத்தை ஒருமுகப்படுத்திய பார்வையாளர்களுக்கு

ஏற்கனவே மாத்ரிமந்திரில் மனத்தை ஒருமுகப்படுத்திய வழக்கமான பார்வையாளர்களுக்கு  மற்றும் முன்னரே மாத்ரிமந்திரில் மனத்தை ஒருமுகப்படுத்தியவர்களுக்கு (மேலே பார்க்கவும்).

உள்அறை மற்றும்  இதழ்கள் தியான அறையில் மனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு ஒவ்வொருமுறையும் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம். முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள்:

·          செவ்வாய்க்கிழமைத் தவிர  மற்ற நாட்களில் காலை 10- 11.30 மணிக்கு (0413) 2622204 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும் அல்லது

·           mmconcentration@auroville.org.in மின்னஞ்சல் மூலம் மூன்று நாட்களிலிருந்து 7 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யவேண்டும்.  இம்முறையில்  முன்பதிவு செய்பவர்களுக்கு முன்பதிவு எண்  மற்றும் விபரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

உள்அறையில் மனத்தை ஒருமுகப்படுத்துவதற்கான நேரம்

·          காலை 9.30 – 10.05 மணி.

·          உள்அறைக்கு செல்ல கடைசியாக அனுமதிக்கப்படும் நேரம்: காலை 9.45 மணி

 

 இதழ் தியான அறை ஒன்றில் மனத்தை ஒருமுகப்படுத்துவதற்கான நேரம்

 

·       காலை 9.30 – 10.45 மணி

·      வழக்கமாக இதே நேரத்தில் 12 தியான அறைகளும் திறந்திருக்கும், ஆனால் குறிப்பிட்ட நாட்களில் ஒரு சில மட்டுமே திறந்திருக்கும்.

·    ஒரு நாளைக்கு ஒரு தியான அறைக்கு மட்டுமே அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.


பொது நிபந்தனைகள்